திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என்று அரசியல் பயணம் செய்து, இப்போது இலக்கிய பேச்சாளராகவும், திமுக மேடையிலும் பேசி வருகிறார் நாஞ்சில் சம்பத்.
தனியார் இணைய ஊடகத்திற்கு அவரது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், நான் கால் சட்டை அணிந்த காலம் முதல் கலைஞர் மீது காதல் கொண்டேன். வைகோவுக்காக திமுகவில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் நான் திமுகவிலிருந்து வெளியே வந்திருக்கக் கூடாது என்று இப்போது நினைக்கிறேன்.
மதிமுக மேடைகளில் திமுக மீது பழி சுமத்தினேன். வைகோவை நியாயப்படுத்துவதற்காக திமுகவை காயப்படுத்தினேன். பின்னாளில் வைகோவின் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக அதிமுகவுக்கு சென்றேன். அம்மா ஜெயலலிதா எனக்கு அடைக்கலம் கொடுத்தார். ஆனால், வைகோவால் தான் எனது அரசியல் வாழ்க்கையை இழந்தேன் என்று தெரிவித்துள்ளார்.