தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்யும் மாணவிகள் குறித்து ஐநா சபையில் பேசிய மதுரை இளம்பெண் பிரேமலதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் இளமனூர் அருகேயுள்ள கார்சேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தமிழ்செல்வத்தின் மகள் பிரேமலதா. பிரேமலாதா, இங்குள்ள ஆதி திராவிடர் நலப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, மனித உரிமைகள் குறித்த ஆவணப்படத்தில் பங்கேற்றார்.
இந் நிலையில் ஐநாவில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு அவருக்கு இப்போது அழைப்பு வந்தது. அதனடிப்படையில், கடந்த 1 மற்றும் 2 ஆம் தேதிகள் ஜெனீவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழக்கும் மாணவிகள் நிலை குறித்து சுட்டிக் காட்டிப் பேசினார். ஐநாவில் நீட் தேர்வு குறித்துப் பேசியதை கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்று, அவரை பாராட்டி உள்ளனர்.