ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது.
ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.