வவுனியா ஒரு சிறப்பான நகரம். பல வளங்கள் உள்ள நகரமாகவும் காணப்படும் நிலையில் வவுனியாவை இலங்கையின் பிரதான நகரமாக மாற்றுவதானது நோக்கங்களில் ஒன்று என ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் வவுனியா, புத்தளம் பிரதேசங்களை பிரதான நகரங்களாக தரம் உயர்த்தவுள்ளேன். மேலும் வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை தீர்மானிக்கும் உரிமையை வழங்குவதோடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளையும் துரிதமாக மீளளிப்பு செய்வேன்.
இன, மத பேதங்களை வெளிப்படுத்தும் அடையாளங்களை இல்லாமல் செய்வதோடு இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மத்திய வங்கியின் நுண்கடன் வழங்குவதற்கு பதிவு செய்யப்படத சட்ட விரோத கம்பனிகளால் பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வேன்.
ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துடன் வடமாகாணத்தில் மக்கள் எதிர் நோக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தேன் என்று தெரிவித்தார்.