எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால், தன்னைக் கொன்று விடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தன்னை கொன்றுவிட்டால் தன்னுடைய இரண்டுகுழந்தைகளும் அநாதைகளாகி விடுவர் என்றும் ஹிருணிகா தெரிவித்தார். தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பயம், இந்நாட்டில் வாழ்கின்ற சகல தாய்மார்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.