அமெரிக்காவில் கடந்த 1987-ம் ஆண்டு 22 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஜெசிகாவை 58 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட அமெரிக்கர்கள், பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள்.
அதன்பின் ஜெசிகாவை பத்திரமாக மீட்க, அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வழியே மீட்பு குழுவினரை அனுப்பி மீட்க திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு பாறை அதிக அளவில் இருந்ததால் தோண்டும் பணி பெரும் சவாலாக இருந்தது. 22 அடியை தோண்டுவதற்கு மட்டும் சுமார் 45 மணி நேரம் ஆனது. அதன்பின் ஜெசிகாவை மீட்பதற்கு மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்குள் சென்றனர். அங்கு படுகாயங்களுடன் மயக்க நிலையில் இருந்த ஜெசிகாவை அவர்கள் பத்திரமாக மீட்டனர். ஒட்டுமொத்தமாக இந்த மீட்பு பணி 58 மணி நேரம் நடந்தது.
மீட்புக்கு பின், ஜெசிகா பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றாள். அவருக்கு 15 அறுவை சிகிச்சைகள் செய்து டாக்டர்கள் காப்பாற்றினர். ஆஸ்பத்திரியில் ஜெசிகா சிகிச்சை பெற்ற போது, அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் அதிக அளவில் பரிசு பொருட்களையும், வாழ்த்து செய்திகளையும் அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்து வாழ்த்தினர். மேலும் அறக்கட்டளை ஒன்று, நிதி வசூலும் செய்தது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனதிலும் இடம் பிடித்த ஜெசிகா, அமெரிக்காவின் குழந்தை என்று அழைக்கப்பட்டாள்.