ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுகுற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிலாபம் நகரில் இன்று பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளுக்காகவும் புலனாய்வு பிரிவினர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டமையின் விளைவு தேசிய பாதுகாப்பினை இன்று பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.