நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்களை தடை செய்வது தொடர்பில் கருத்துக்கள் பரவலாக காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களை தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்: VPN ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அது பொய். அப்படி ஒன்றும் இல்லை. எனினும் அந்த இடத்திற்கு எம்மை கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.