பாதுகாப்பு அமைச்சினால் குறுந்தகவல் சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பிலான சரியான மற்றும் உத்தியோகபூர்வமான தகவல்களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் நோக்கில் இந்த குறுந்தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போலி பிரசாரங்கள் தொடர்பில் மற்றும் அவசியமான தகவல்கள் தொடர்பிலும் இந்த சேவை மூலம் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
குறித்த குறுந்தகவல் சேவையை விசேடமாக செயற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவினூடாக அனைத்து தொலைபேசிகளுக்கும் குறித்த குறுந்தகவல் அனுப்பப்படும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.