என்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜகிரியாவிலுள்ள தேர்தல் ஆணைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதை இட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
அந்தவகையில் குறித்த வெற்றியை பிளாஸ்டிக் மற்றும் பதாதைகள் எதனையும் பயன்படுத்தாமல் மக்களை கொண்டாடுமாறு கோரியிருந்தேன். அதேபோன்று மக்களும் செயற்பட்டமை மேலும் சந்தோசத்தை தருகின்றது.
அந்தவகையில் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தமைக்காகவே அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.
மேலும் தேர்தல் காலத்தில் என்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் எனது காலத்திலேயே நிச்சயம் நிறைவேற்றுவேன்.
இதேவேளை தடைப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.