கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பிரதேசத்தில் உள்ள குமரபுரத்தில் அமைக்கட்ட சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டம் திறப்பு விழா இனிதாக நடைபெற்றது. நேற்றைய தினம் சனிக் கிழமை திறந்து வைக்கப்பட்ட இந்த மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
திறப்பு விழாவில் வரவேற்புரையை பேரின்நாதன் சுப்பிரமணியம் வழங்க, ஆசியுரையினை சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்களும் அருட்தந்தை ஏ.ஜே. ஜேசுதாஸ் அடிகளாரும் வழங்கினர். அத்துடன் திறப்புரையினை ஓய்வுநிலை அதிபர் மகாலிங்கம் பத்மநாபன் வழங்கினார்.
அத்துடன் வாழ்த்துரைகளை ஓய்வுநிலை அதிபர் சோதிநாதனும் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் மகாலிங்கம் பத்மநாதனும் வழங்க, நன்றியுரையினை சின்னயா கந்தசாமி வழங்கினார். நிகழ்ச்சியினை வணக்கம் லண்டன் ஆசிரியரும் நிறுவனருமான சுரேஸ் தொகுத்து வழங்கினார்.
இதேவேளை சுப்பிரமணியம் இராசம்மா மண்டப திறப்பு விழாவை தொடர்ந்து உயிர்வாசம் நாவல் வெளியீடு இடம்பெற்றது. அத்துடன் மாலை கலாநிதி ஆறுதிருமுருகனின் சொற்பொழிவு இடம்பெற்றதுடன் தென்னிந்திய இளம்பாடகர்களின் இசை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
இதேவேளை இன்றைய தினம், பரந்தன் இளைஞர் வட்டம் நடாத்தும் பௌர்ணமி விழா – தென்னிந்திய இளம்பாடகர்களின் இசை நிகழ்ச்சி இடம்பெறுகின்றது. இதேவேளை தொடர்ந்தும் சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்- மு. தமிழ்செல்வன்