இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தச்செய்ததுடன், பெரும் பதற்றத்தையும் தோற்றுவித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்திருந்த நிலையில், பெண் வைத்தியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இக்கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது , குறித்த 4 பேரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற பொலிஸாரை குறித்த கசந்தேக நபர்கள் தாக்கியுள்ளதோடு, மறுபடியும் தப்பிசெல்ல முயன்றதால் 4 பேர் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தில், சந்தேக நபர் நால்வரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.