சிங்ஹராஜ வனத்திற்கு அருகாமையிலுள்ள லங்காகம என்ற பகுதியில் மக்கள் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லாமையினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை கயிறு ஒன்றை பிடித்து தொங்கி கொண்டு பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நெடுஞ்சாலைகள், அதிவேக பாதைகள் என அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கையில் இப்படியான சூழல் முழுதாக மாற்றம் அடைய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், தற்போது மழை காலம் என்பதால் லங்காகம பகுதியில் உள்ள மக்கள் பாரிய சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர். உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.