அவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது.இந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில், மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையின் Transparency Sri Lanka அமைப்பு “Integrity Icon – நேர்மையின் அபிஷேகம்” எனும் தலைப்பில் மக்களுக்கும் நாட்டுக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுகின்ற அரச அதிகாரிகளை மக்களுக்கு வெளிப்படுத்தவும் அவர்களை கௌரவிப்பதற்குமான ஓர் செயற்திட்டத்தினை தொடங்கியிருந்து.இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் இருந்து அரச அதிகாரிகள் பலர் தேர்தெடுக்கப்பட்டு அவர்களின் செயற்திறன்கள், ஆளுமைகள், அவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றினை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களின் வாக்குகள் மூலம் அவர்களில் ஒருவர் முதல்நிலையாக தெரிவு செய்யப்பட்டனர்.
அதில், முதல் இடத்தை யாழ் போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளர் வைத்திய கலாநிதி கெளரவ டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டு வடக்கிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், அவருக்கு பெருமளவில் வாக்குகள் குவிந்தது.இதனையடுத்து, இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
போர்க்காலத்தில் மிகவும் நெருக்கடிகளின் மத்தியில் மருத்துவப் பணியாற்றிய சத்தியமூர்த்தி, வன்னி மண்ணில் வாழ்ந்து மக்கள் பணியாற்றி வருகின்றார். இவருக்கு கிளி மக்கள் அமைப்பு மண்ணின் மைந்தன் என்ற விருதை வழங்கியமை இங்கு நினைவுகூரத்தக்கது.