ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டு இராணுவத்தினர் முன்னிலையில் பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், “இலங்கை இராணுவமானது நாட்டிற்கு பாரியசேவையை ஆற்றியுள்ளது. இதற்காக முழு நாடும் இராணுவத்திற்கு கடன்பட்டிருக்கிறது.
நீங்கள் அனைவரும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு பங்களித்திருக்கிறீர்கள், ஆனால் விடுதலை புலிகள் சித்தாந்தம் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த பெருமைமிக்க அமைப்பில் நீங்களும் அங்கத்தவர்களாய் இருப்பதை முன்னிட்டு நீங்கள் பெருமையடையுங்கள் அத்துடன் உங்களை சரியான தலைமைத்துவ படுத்தி முன்னோக்கி செல்வதற்கான இராணுவ தளபதி தற்போது உங்களுடன் உள்ளார். இராணுவ மனிதர்களாகிய எமது தரத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.
பயங்கரவாத்தை தோற்கடித்து எமது நாட்டில் சமாதான சூழ்நிலையை நிலை நாட்டிய இராணுவத்தை கௌரவமாக எமது நாட்டில் மதிக்கின்றார்கள். அதன் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள இராணுவ தலைமையகத்தை போன்று இன்று எமது இராணுவ தலைமையகம் ஸ்ரீ ஜயவர்தனபுர பூமியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் அமைக்கப்பட்டுள்ளன.
இருந்தபோது எமது இராணுவ வீரர்கள் கடந்த காலங்களில் அரசியல் நாடகங்களினால் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர் இப்படியான சம்பவங்கள் வேதனைக்குரிய விடயமாக அமைகின்றது.
தேசத்தின் பாதுகாவலர்களாகிய நாங்கள் எமது நாட்டைப் பாதுகாக்க மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாம் மிகவும் கஸ்ட்டப்பட்டோம். உங்கள் இராணுவ தளபதி என்னை முதலில் சந்தித்த போது தொழில்முறை முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயங்களைப் பற்றி என்னுடன் கலந்துரையாடினார்.
நாங்கள் ஏற்கனவே தீர்வு நடவடிக்கைகளைத் ஆரம்பித்தோம், ஆகையால் இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் இராணுவத்தில் இடம்பெறாது என்று நான் உங்கள் முன்னிலையில் உறுதியளிக்கின்றேன்” என கூறினார்.