பிரித்தானிய லேபர் கட்சியின் தலைவர் ஜெரம் கோர்பின் பிரித்தானிய புலம் பெயர் புலி ஆதரவாளர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
தான் அதிகாரத்துக்கு வந்தால், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு சுயாட்சியொன்றை பெற்றுத் தருவதற்காக செயற்படுவதாகவும், வன்னி இராணுவ நடவடிக்கையை தமிழ் மக்களின் படுகொலையென பெயரிடுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து இந்த வாக்குறுதிகளை அவர் வழங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜெரம் கோர்பின் பிரதமராக தெரிவானால், இலங்கைக்கு ஆபத்தான ஒரு நிலைமை ஏற்படும் எனவும் கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நெஸ்பி குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் ஜெரம் கோர்பினுக்கும் இடையில் இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.