யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்றையதினம் உறுப்பினர்களுக்கு இடையில் சாதீய வேறுபாடு தொடர்பில் பெரும் வாக்குவாதமும், இழுபறி நிலையும் ஏற்பட்டது .
மக்களின் சமூக வாழ்வியலை மேம்படுத்தும் மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் தமக்குள் தாமே நான் பெரிதா நீ பெரிதா என மோதிக்கொண்டது அருவருக்கத்தக்க செயற்பாடாக மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைமைகள் மெளனமாக காய்நகர்த்துவதும் அருவருக்க தக்கதாக உள்ளது . அடுத்த நாடாளுமன்றத்தில் இடம்பிடிக்க இவர்கள் உண்மைகளை மறைத்து நாடகமாடுகின்றனரோ என எண்ண வைக்கின்றது .
சம்பவம் இடம்பெற்ற உடன் பிரச்சனைக்குரிய நபர் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை எமது செய்திப்பிரிவு தொடர்புகொண்டபோது, பொறுப்பற்ற தனமாக நான் இந்த விடயம் தொடர்பில் அறியவில்லை என பதில் வழங்கியிருந்தார்.
அதேபோல இன்றையதினம் எனக்கு வேறு வேலை இருந்தது அதனால் நான் இந்த விடயங்கள்தொடர்பில் முழுமையாக அறியவில்லை என தமிழரசு கட்சியில் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பொறுப்பற்ற தனமாக எமது ஊடகத்துக்கு பதிலளித்துள்ளார் .
இந்தசம்பவத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியின் உறுப்பினர் மிக அநாகரீகமாக நடந்து கொண்டிருந்தார் .
இந்த அநாகரிக செயற்பாட்டை தண்டிக்கவோ , அல்லது கட்டுப்படுத்தவோ கட்சி சார்ந்தவர்கள் என்ன முடிவை எடுத்துள்ளனர் என அறிய முற்பட்டபோதும் – ஊடகம் என எதை சொல்கிறீர்கள் பத்திரிகை மட்டுமே ஊடகம் ஏனையவற்றில் வந்த விடயங்கள் தொடர்பில் கருத்து சொல்வது கடினம் என மாவை சேனாதிராஜா பதிலளித்துள்ளார்.