7
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் இன்று (23) மதியம் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீா் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு, நாகா்கோவில் பகுதியில் இராணுவ வீரர் மீது தாக்குதல் நடாத்தியதாக தேடப்படும் முக்கிய நபர் உள்ளிட்ட 6 போ் தங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி குறித்த வீட்டினை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இணைந்து சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது இளைஞன் ஒருவரை இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.