இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது.
பேர்ள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொறுப்புக்கூறல் விடயத்திலும் அரசியல் சீர்த்திருத்தத்திலும் தக்கவைக்கத்தக்க முன்னேற்றங்களை வலியுறுத்த ஐக்கிய அமெரிக்கா இலங்கையுடனான அரச உறவை பலப்படுத்த வேண்டும்.
மேலும் ஐக்கிய அமெரிக்க அரசானது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏனைய இலங்கை அலுவலர்களுக்கு எதிராகவும் தடைகளைக் கொண்டுவர வேண்டும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உலகளாவிய சட்ட விதிகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்துலக முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும்.
மேலும் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை வரவேற்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.