கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி செயற்பாட்டளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் மு.சிவமோகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டார்.
அத்துடன் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி கட்சியின் மாவட்ட கிளையின் செயலாளர் விஜயன் ஆகியோருடன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.