எனினும் அந்த நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் நிராகரித்துள்ளது.
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் 43ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வின்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும்போது மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் இதனை அறிவித்துள்ளார்.
இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை குழுவொன்றை போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக அமைக்கும் என நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்திருந்தார்.
உள்நாட்டு செயல்முறைகள் கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றன, எனவே மற்றொரு விசாரணை ஆணைக்குழுவை அமைப்பது என்பது இந்த செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை பச்லெட் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது, மேலும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் மனித உரிமை மீறல்களின் இடம்பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.