ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் மீதான விமர்சனக் கருத்துக்களுக்கு பதில் உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது கட்சி யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி. இது யுத்த காலத்திற்கு முன்னரும் இருந்தது யுத்த காலத்திற்குப் பின்னரும் இருக்கும் கட்சி. இது யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி, அந்த கட்சிக்கு திடீரென ஜனநாயக பண்புகள் வந்துவிடாது. 30 வருடம் வேறுவிதத்தில் பழகிவிட்டோம். சொன்னதை செய்தது .
யுத்தகாலத்தில் கூட பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன, தனிய ஒன்று மட்டும் இருக்கவில்லை, அது ஒன்றாக வந்தது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். சகோதர படுகொலைகளின் மூலமாகத்தான் அது ஒன்றாக வந்தது எனவும் தெரிவித்தார்.