வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இதுவரையில், 70 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 42 ஆயிரம் விண்ணப்பபடிவங்கள் தகுதி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, தகுதியற்றவர்களின் விண்ணப்பபடிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நியமனம் வழங்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என்பதுடன், 7 நாட்களில் பயிற்சியில் முன்னிலையாகவில்லை எனின் நியமனம் இரத்து செய்யப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.