யாழ் வடமராட்சி கிழக்கு கேவிலை சேர்ந்த 39 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா உதயசிவம் என்பவர் இன்று மதியம் 1:00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை தனது பிள்ளைகளை கோட்ட மட்ட விளையாட்டு போட்டிக்காக அழைத்துச் சென்று செம்பியன் பற்று அதக பாடசாலையில் நின்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தற்போது கிளிநொச்சியில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெறப்படுவதாகவும், அவரது கைது தொடர்பில் அவரது மனைவி தெரிவித்ததுடன் கைதுக்கான காரணம் ஏதும் இதுவரை தெரிவிக்கபடவில்லை என்றும் தெரிவித்த அவர் இது தொடர்பாக தான் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட செல்வராசா உதயசிவம் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு முன்னாள் செயலாளராகவும் பல்வேறு பொது அமைப்புக்களில் இருந்து சட்டவிரோத கடல் தொழில் பனைமரம் மற்றும் வள அழிப்பு போன்றவற்றிற்க்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் என்பதுடன் ,பல தடவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இது தொடர்பாக முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.