கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் தயாராக இருக்குமாறு தனது செயலாளர் பி.பி.ஜயசுந்தரவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து, கொரோனா அற்ற நாடாக இலங்கையை பேணுவதற்கும், வணிகங்களை வழமை நிலையில் கொண்டு நடத்தவும் அதிக பட்ச முயற்சிகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக பி.பி.ஜயசுந்தர உரிய அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இது தேசிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சூழ்நிலையாகும் எனவும், அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சாதகமான பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.