செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எச்சரித்த சீன மருத்துவர்; காலம் கடந்த ஞானம்! மன்னிப்பு கோரியது சீனா; நடந்தது என்ன?

எச்சரித்த சீன மருத்துவர்; காலம் கடந்த ஞானம்! மன்னிப்பு கோரியது சீனா; நடந்தது என்ன?

2 minutes read

கொரோனா பாதிப்பு இருப்பதாக , Li Wenliang எங்களுக்கு முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது என சீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனாவை மட்டுமல்ல இன்று முழு உலகையும் நிலைகுலையச் செய்திருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பில் முதல் முதலில் வெளிப்படுத்தியவர் தான் Li Wenliang என்கிற மருத்துவர். ஆனால், அவரின் பேச்சினை அரசும் கண்டு கொள்ளவில்லை அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.

கொரோனா வைரஸ் தாக்கம், சீனாவின் இரண்டாம் வாரத்திலே தொடங்கிவிட்டது. இரண்டாம் வாரத்திலே இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக ஒருவர் பலியானார். சீனாவின் வுகான் பகுதியை சேர்ந்த சேர்ந்த Li Wenliang என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலே கண்டுபிடித்துவிட்டார்.

சீனாவில் இருக்கும் வுகான் மத்திய மருத்துவமனையில் தான் Li Wenliang வேலை செய்தார். அங்குதான் முதலில் வைரஸ் பரவியது.

இவர் அங்கு பணியாற்றும் போது டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார்.

இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸை சோதித்த Li Wenliang அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அதோடு உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்தார்.

Li Wenliang அளித்த மருத்துவ பரிசோதனையின் முடிவை பார்த்து, சீன மருத்துவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு, மக்களுக்கு இவர்தான் உண்மையை அறிவித்தார்.

ஆனால் சீனா அரசு உடனே இவரை முடக்கியது. இவருக்கு எதிராக சீன அரசு வழக்கு தொடுத்தது. இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிட கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் குறித்து கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் திகதி Li Wenliang காய்ச்சல் காரணமாக படுக்கையில் விழுந்தார். அதற்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார்.

அதன் பின் தான் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர் பெப்ரவரி 7-ஆம் திகதி கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸை முன்பே கண்டுபிடித்த இவரை, அரசு பாராட்டாமல், முடக்கியது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும், Li Wenliang-ஐ தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது Li Wenliang-யிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பாக வுஹான் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், Li Wenliang எங்களுக்கு கொரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதவி செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.

அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும்.

பலர் பலியாகி இருக்க மாட்டார்கள். ஆனால் முடியாமல் போய்விட்டது. மக்களுக்காக உயிர் துறந்த Li Wenliang-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவர்களின் இந்த மன்னிப்புக் கோரலினை அந்நாட்டு ஊடகங்கள் சில காலம் கடந்த ஞானம் என்று வர்ணித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More