யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி இனங்காணப்பட்டுள்ளார்.
40 வயதான ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் T.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ். அரியாலை பகுதியில் கடந்த 15 ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிட்சர்லாந்து நாட்டு போதகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நபரை தேசிய தொற்றுநோயியல் பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் T.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் மற்றுமொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.