சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கம் மேலும் $0.7 Billionயை (சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா ) கடனாக பெற தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னர் $0.5 Billion ( சுமார் 9,285 கோடி ரூபா ) பெற்றுக்கொள்ள கையெழுத்திட்ட உடன்படிக்கைக்கு மேலதிகமான கடனாக இந்த தொகையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து $1.2 Billion ( சுமார் 22,285 கோடி ரூபா ) கடனாக பெறப்படவுள்ளது.
இதனிடையே அத்தியாவசிய பொருட்களை தவிர ஏனைய பொருட்கள் இறக்குமதி செய்வதை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கார்கள், குளிர்சாதனப் பெட்டிகள், மின்னணு பொருட்கள் உட்பட ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதென்றும், நாட்டிலுள்ள நிதி சந்தையில் கையிருப்பை தக்க வைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்