கொரோனா வைரஸால் முதன்முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் முழுமையாக குணமடைந்த 52 வயதான சுற்றுலா வழிகாட்டி தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி விபரித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் தனது அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “கொரோனா வைரஸ் தொற்றிய பின் எனக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. பின்னர் இரவில் எனக்கு முடியாமல் போனது.
இதற்கு மருந்து எடுக்கும் போது எனக்கு தொண்டையில் கட்டி என வைத்தியர் கூறி மருந்து தந்தார். மருந்தை குடித்த பின் எனக்கு காலையில் சுகமாகியது. எனினும் மீண்டும் இரவு முடியாமல் போனது.
பின்னர் எனக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்ட பின் மிகவும் பயம் ஏற்பட்டது. ஆனால் வைத்தியசாலைக்குச் சென்று அனுமதிக்கப்பட்ட பின் மருத்துவம் செய்வதைப் பார்த்த பிறகுதான் சுகமாகி விடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.அது வரை எனக்கு மிகவும் பயம் ஏற்பட்டது.
ஐ.டி.எச் வைத்தியசாலையின் சேவை மிகவும் சிறந்தது. நான் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருந்தேன். பின்னர் எனக்கு சிறப்பான வைத்தியம் பார்க்கப்பட்ட பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது நான் சுகமாகி விடுவேன் என்று” என கொரோனாவால் முதன்முதலில் பாதிக்கப்பட்டவரும், அதிலிருந்து குணமடைந்தவருமான நபர் கூறினார்.