செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள: அ. இரவியின் குறிப்புக்கள்

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள: அ. இரவியின் குறிப்புக்கள்

2 minutes read

ஓரளவுக்குக் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள (நான் படித்ததிலிருந்து)

1) இந்த வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் தேவை.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் – தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓரு மிடறு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருக்க உதவுவதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக் கால்வாய் வழியாக கழுவி வயிற்றை அடைந்து சமிபாட்டு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும்.

2) இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் கொண்டு தொண்டையையும், வாயையும் அலசுங்கள்

3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் வண்ணம் உள்ளது. எந்த சவர்க்காரமும் அல்லது கழுவுதிரவமும் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், நேரடியாக குளியல் செய்யுங்கள் அல்லது உடையை அலசுங்கள்.

4) நாள்தோறும் உடைகளை கழுவி வெய்யிலில் உலர்த்துங்கள்.

5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6) கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கான முறைகளை (கையுறை) கடைப்பிடியுங்கள். உங்கள் வீடுகளின்கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7) புகை பிடிப்பதை தவிருங்கள்.

8) உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

9) மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.

10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13) covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14) உங்களில் கவனமெடுப்பதுடன்,  ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

-அ. இரவி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More