இங்கிலாந்தில், கொரோனாவுக்கு இதுவரை 335 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 3 வார காலங்களுக்கு முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பொது இடங்களில் 2 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.
திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டார். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக மக்கள் வெளியே வருவதை அனுமதிக்க முடியாது எனவும், உத்தரவுகளை மீறினால் தண்டனை வழங்கப்படும் எனவும் போரிஸ் ஜான்சன் கூறினார்.