செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனாவுக்கு எதிரான பிரித்தானிய போரில் 35,000 க்கும் மேற்பட்ட NHS பணியாளர்கள்

கொரோனாவுக்கு எதிரான பிரித்தானிய போரில் 35,000 க்கும் மேற்பட்ட NHS பணியாளர்கள்

2 minutes read

கொரோனா வைரஸுக்கு எதிரான பிரித்தானியாவின் போரில் 35,000 க்கும் மேற்பட்ட தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் (NHS) மேலதிகமாக சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு புதிய மருத்துவமனையைத் திறந்து 250,000 தன்னார்வ பணியாளர்களை நியமிக்கும் திட்டத்தை அரசாங்கம் வெளிப்படுத்தி உள்ளது. விசேடமாக லண்டனின் டொக்லாண்ட்டின் எக்செல் மையத்தில் உள்ள நைட்டிங்கேல் மருத்துவமனை அடுத்த வாரம் திறக்கப்படும் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Health Secretary Matt Hancock)  இன்று பிற்பகல் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். நாட்டின் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்த சில நிமிடங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அத்துடன் பிரித்தானியாவில் நிறுத்தப்படாமல் தொடரும் கட்டுமான தளங்களை மூடுவதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார். இதேவேளை தொழிலாளர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதேவேளை சுயதொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், நிதிச் செயலாளர் ரிஷி சுனக் இந்த நடவடிக்கை ஒரு “நம்பமுடியாத சிக்கலான” பணி என ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தப் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மலேரியா எதிர்ப்பு மருந்தான குளோரோகுயினின் (chloroquine) ஏற்றுமதிக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறதா என பிரித்தானியாவின் NHSன் தேசிய மருத்துவ இயக்குனர் பேராசிரியர் ஸ்டீபன் போவிஸிடம், ( NHS England’s National medical director Professor Stephen Powis) கேட்கப்பட்டது.

இந்த virus இற்கு எதிரான மருத்துவமாக அமையவல்லதாக பல மருந்துகள் ஆர்வத்துடன் நோக்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட chloroquine and hydroxychliroquine என்பன நீங்கள் குறிப்பிட்டவாறே மலேரியாவிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டவையே

“இந்த virus இற்கு எதிரான மருத்துவமாக அமையவல்லதாக பல மருந்துகள் ஆர்வத்துடன் நோக்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட chloroquine and hydroxychliroquine என்பன நீங்கள் குறிப்பிட்டவாறே மலேரியாவிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டவையே. அந்த மருந்துகளைஎவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை அறிய சர்வதேச அளவிலும், பிரித்தானியாவிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.”

“இங்கே பிரித்தானியாவில் மருத்துவ பரிசோதனைகளின் நிலவும் சூழலில் எங்களால் முடிந்தவரை செய்ய விரும்புகிறோம். மருத்துவ சோதனைகளைச் செய்ய நாங்கள் ஏற்கனவே சிறந்த வலையமைப்புகளை அமைத்துள்ளோம், மேலும் மருந்துகள் எங்கு இயங்கக்கூடும், அவை எங்கு செயல்படவில்லை என்பதை முழுமையாகக் கற்றுக்கொள்வதற்கு நாங்கள் அதைச் செய்வது முக்கியம்” எனவும் குறிப்பட்டள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More