0
இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதவாகியுள்ளது. இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 178 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.