செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஸ்ரீலங்கா இராணுவ பெண் சிப்பாய்களின் உயிரைக் காத்த விடுதலைப் புலிகளின்!

ஸ்ரீலங்கா இராணுவ பெண் சிப்பாய்களின் உயிரைக் காத்த விடுதலைப் புலிகளின்!

2 minutes read

23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்கள் செல்வது வழமை.ஆனால் பலத்த பாதுகாப்போடு தான் வாகன அணி செல்லும். சிறுத்தைப் படையணி போராளிகளும் தாக்குதலுக்கு தயாராகினர்.

அதாவது மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் இராணுவ பஸ்ஸினை இடைமறித்து தாக்குதல் நடத்துவது தான் திட்டம். போராளிகள் தாக்குதலுக்காக பதுங்கியிருந்தனர். இராணுவ தொடரணி அன்று வரவில்லை.மாறாக ஒரு பஸ்ஸில் மட்டும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர்.

அந்த வாகனத்தின் மீதி ஆர் பி ஜி 22 மூலம் முதல் தாக்குதல் நடப்பட்டு பஸ் நிறுத்தப்படுகிறது. சிறுத்தைப் படைப்போராளிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு பஸ்ஸினை நோக்கி சென்றனர்.பஸ்ஸில் இருந்தும் பதில் தாக்குதல் வருகிறது.ஆனால் போராளிகளுக்கு எந்த இழப்பும் இல்லை. பஸ்ஸில் இருந்த இரண்டு இராணுவத்தினரின் உடல்கள் வெளியே காணப்படுகிறது. சாரதியாக இருந்த இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டார்.

போராளிகளும் பஸ்ஸின் உள்ளே சென்று பார்த்தபோது 40இற்கும் மேற்பட்ட இராணுவ பெண் சிப்பாய்கள் இராணுவ சீருடையில் காணப்படுகின்றனர். அவர்களில் சிலரிடம் T56 ரக துப்பாக்கி காணப்பாட்டாலும் திடீர் தாக்குதலால் அவர்கள் நிலைகுலைந்து விட்டனர். அந்த இராணுவ பெண் சிப்பாய்கள் தங்களது கைகளால் முகத்தை மூடியவாறு அவர்களது கடவுளை வேண்டியவாறு பயத்தில் இருக்கின்றனர்.

இவர்களை பார்த்த போராளிகள் உள்ளே சென்று ஆயுதங்களை மட்டும் எடுத்துகொண்டு அந்த இராணுவப் பெண் சிப்பாய்களை எதுவும் செய்யாமல் உயிரோடு விட்டு விட்டு வெளியேறுகின்றனர். அந்த பெண் சிப்பாய்கள் தாங்கள் உயிர் தப்பி செல்வோம் என்று கற்பனையிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் அவர்களது இராணுவத்தினர் தமிழ் மக்களையே ஈவிரக்கம் பார்க்காமல் சுட்டுக்கொல்லும் போது பெண் போராளிகளையும் பெண்கள் என விட்டதுமில்லை. யுத்த மரபுப்படி இராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் களத்தில் இருப்போரை சுட்டுக்கொல்ல முடியும். ஆனால் உயிர் பயத்தில் இருந்த அந்த பெண் சிப்பாய்களை கொல்லவில்லை.

அன்று எம் போராளிகள், பெண் சிப்பாய்களை உயிரோடு விட்டு விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை அவர்களுக்கு மீண்டும் நிரூபித்தனர். எந்தவொரு போர் வீரனும் யுத்தகளத்தில் நிராயுதபாணியாக நிற்பவனை கொல்லமாட்டான். ஆனால் ஸ்ரீலங்கா இராணுவம் பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று தாங்கள் இராணுவம் அல்ல இனவெறியர்கள் என்பதை உலகுக்கு காட்டியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More