ஊரடங்கால் மனிதர்கள் கூண்டுக்குள் அகப்பட்ட மிருகங்களைப் போல வீடுகளுக்குள் அடங்கிக் கிடக்கும் நேரத்தில் சிங்கங்கள் சாலையில் ஹாயாக உறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.தென்னாப்பிரிக்காவின் குரூகர் தேசிய வனவியல் பூங்காவில் காணப்பட்ட இந்த அரிய காட்சியை அங்கு ரேஞ்சராக இருக்கும் ரிச்சர்டு சவுரி என்பவர் படமெடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் அமைதிப்பள்ளத்தாக்காக மாறி விட்ட இந்த தேசிய வனவியல் பூங்காவில், தங்களை படம் எடுத்த ரேஞ்சரை இந்த சிங்கங்கள் கண்டுகொள்ளவில்லை.இதனால் இந்த சிங்கங்களுக்கு மனிதவாடை மறந்து விட்டதோ என்ற மெண்டுகள் இணையத்தில் உலவுகின்றன.