நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நிலைமை தொடர்பில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய மாவட்டங்களில் தற்போது தளத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, குறித்த மாவட்டங்களில், 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.