இலங்கையில் நேற்றைய தினம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 460 ஆகும்.
இந்த 40 பேரில் 10 பேர் கடற்கடை சிப்பாய்களாகும். இவர்கள் வெலிசர முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன் வெலிசர முகாமில் இருந்து வீடு சென்ற வந்த 10 பேர் இதனுள் உள்ளடங்குகின்றனர்.
அந்த 10 பேரின் குடும்பங்களில் இருவரும் உள்ளடங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக இராணுவ பெண் அதிகாரி ஒருவர் (அவர் கடற்படை அதிகாரியை திருமணம் செய்துள்ளார்) உட்பட மூன்று இராணுவத்தினர் உள்ளடங்குகின்றார்.
இதற்கு மேலதிகமாக பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 10 பேரும் அவர்களுக்குள் உள்ளடங்குகின்றனர்.
புத்தளத்தில் இருந்து கட்டுகெலியாவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்த மூவரும், ஓமான் விமான நிலையத்தில் சிக்கியிருந்த நிலையில் அழைத்து வரப்பட்டவர்களில் மூவரும், மாலைத்தீவில் இருந்து இலங்கை வந்த ஒருவரும் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றார்கள்” என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.