தகவல்களை மறைப்பதனால் கொரோனா பரவுவதனை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கும் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் அறிகுறிகள் உள்ளதாக சந்தேகம் இருப்பின் அல்லது இருமல், தடுமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியசாலைகளுக்கு செல்ல முன்னர் சுகாதார பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
1999 அல்லது 1390 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்தினால் இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அறிவிப்பு விடுக்காமல் சிலர் வைத்தியசாலைகளில் அனுமதியாகுவதால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாங்கள் தங்களின் உண்மையான விலாசத்திற்கு பதிலாக போலி விலாசம் வழங்குவதாலும் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.