0
நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் நாட்டில் வியாபிக்குமாயின், அவற்றுக்காக வைத்திய சிகிச்சை கட்டமைப்பை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.