யுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி, முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட இரண்டு மாணவிகள் 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை பல்வேறுத் தரப்பின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகளான, செல்வி பவதாரணி கெங்காதரன் மற்றும் செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோரே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனைர்.
சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டடவர்களின் பாராட்டுகளை பெற்ற மாணவிகள் இருவரும், இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
Kumar Sangakkara✔@KumarSanga2
Courage and determination. Proud Sri Lankan’s we are all proud of. Well done. https://twitter.com/kavinthans/status/1255151532212752384 …Kavinthan s@KavinthansTwo students from Mullaitivu, Bawatharanani and Vidurshika, who were disabled by the war, have excelled in G.C.E. O/L. They have obtained 8 As, B and 6 As, 2Bs respectively. They got injured in 2 separate incidents during 2009. They have made this amidst hardships.#SriLanka #Lk
இருவரும், தன்னுடைய ட்விடடர் (Twitter) தளத்தில் இரு மாணவிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கெங்காதரன் பவதாரணி கடந்த 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் மாத்தளன் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் தன்னுடைய தந்தையாரை பறிகொடுத்ததோடு, தானும் பாதிக்கப்பட்டார்.
இவர், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி 8 “A“ சித்திகளையும், ஒரு “B“ சித்தியையும் பெற்றுள்ளார்.
Amazing… well done https://twitter.com/kavinthans/status/1255151532212752384 …
Kavinthan s@KavinthansTwo students from Mullaitivu, Bawatharanani and Vidurshika, who were disabled by the war, have excelled in G.C.E. O/L. They have obtained 8 As, B and 6 As, 2Bs respectively. They got injured in 2 separate incidents during 2009. They have made this amidst hardships.#SriLanka #Lk
இவர் கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6 “A“ சித்திகளையும், ஒரு “B“ சித்தியையும், 2 “C“ சித்திகளையும் பெற்றுள்ளார்.