Bacillus Calmette–Guérin (BCG) vaccine என்ற தடுப்பு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த மக்களுக்கு கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
BCG ஊசி மருந்தை போட்டுக்கொண்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் சுவாசிப்பதில் உருவாகும் சிரமத்தை எதிர்கொள்ள சிறந்த எதிர்ப்பு சக்தி இருக்கின்றது என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.