நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மே 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார சேவைகள் பிரிவினர் சிறப்பான முறையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில், மே 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாதுள்ளது.
வெசாக் உற்சவ நாட்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதனைத் தொடரந்து வரும் நாட்களும் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனையின் படி மக்கள் செயற்படுவது அவசியம் என்றார்.