0
கேகாலை ஹெட்டிமுல்ல,வதுர பிரதேசத்தை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த இந்த சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்று முகாமுக்கு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கடற்படை சிப்பாயின் குடும்பத்தினர், அவரது சகோதரரின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 11 பேர் காலி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.