கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் பொய்யான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த புள்ளிவிபரத் தகவல்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு டொக்டர் அனில் ஜாசிங்க, அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளார்.
பிழையான தகவல்களை வெளியிடுவது கொரோனா நோய்த் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தவதற்கு சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பிரிவினர் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் பிழையான தகவல்களை வெளியிடுவது தொற்று பரவுகையை ஒழிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 வீதம் எனவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் 13 வீதமாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது எனவும் டொக்டர் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.