1
கொழும்பில் நேற்று (5) உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (6) காலை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த பெண்மணிக்கு வைரஸ் எவ்வாறு, யாரால் தொற்றியது என்பது பற்றி இதுவரை தகவல் தெரியவரவில்லை.
எப்படியாயினும் அதனை கண்டறிவோம். இன்றைய தினத்திற்குள் அது தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிடுவோம். – என்றார்.