வாசனை இழப்பு மற்றும் நாவின் சுவை இழப்பு கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் இதனையே அம்னோசியா என்றழைக்கின்றோம். எனவே அத்தகையோர் தொடக்கத்திலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு இங்கிலாந்து அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் கொரோனா பெரும்பாலும் அறிகுறியே இல்லாமல் பரவுவதாக கூறப்படும் நிலையில் இதை ஒரு வாசனை இழப்பும் சுவை இழப்பும் கொரோனாவின் அடையாளங்களாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இத்தகைய நபர்கள் தொடக்கத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் பிற உயிர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்றும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். வாசனை மற்றும் சுவை இழப்புடன் இருமலும் மூச்சு விடுவதில் சிரமும் இருந்தால் அது நிச்சயம் கொரோனாவின் அடையாளம்தான் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.