இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களுக்கு விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலகட்டங்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் செல்ல வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களாக கருதப்படுவார்கள்.
இதேவேளை நாளை மறுதினம் அதிகாலை 5 மணிக்கு நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இதனூடாக வாரத்தில் 5 நாட்களுக்கு மக்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையின் பிரகாரம் வெளியேற முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.