வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்நேற்று சரணடைந்தார்.
சட்டத்தரணி சந்திரசேகரனின் ஏற்பாட்டில் முன்னாள் போராளி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
“எனது கட்சிக்காரரை இராணுவத்தினம் தேடிவந்தனர்.
எனினும் சிப்பாயைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில் அவரது பெயர் இல்லை. அதனால் பொலிஸாரால் தேடப்படும் நபராக அவர் உள்ளரா என்பதை பொலிஸ் தலைமையகத்தில் உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்றிருந்த சிலர், எனது கட்சிக்காரரைத் தேடியுள்ளனர். அதனால் அவரை இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்” என்று சட்டத்தரணி தெரிவித்தார்.