இதனை தவிர ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா பிரதேசங்களில் அனுமதி பெற்ற சிறப்பு அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மதுபான வகைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் கூட்டமாக அமர்ந்து மதுபானங்களை அருந்துவது கொரோனா வைரஸ் தொற்று பரவாக காரணமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.