செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தனது 3 மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி கோட்டா

தனது 3 மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி கோட்டா

1 minutes read

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இட்டுகம எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் கையளித்துள்ளார்.

இதன் போது ஜனாதிபதி தமது மூன்று மாத சம்பளமான இரண்டு இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயை இவ்வாறு வழங்கியுள்ளார்.

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக ஜனாதிபதி செயலகம் ´இட்டுகம´ என்ற விசேட நிதியத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிதியம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியத்திற்கு நன்கொடைகளை #207#  என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தோ அல்லது www.itukama.lk என்ற இணையத்தள முகவரியை பயன்படுத்தியோ வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More